சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவன் நானல்ல: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடும் தாக்கு!!!

சனி, 23 மார்ச் 2019 (09:49 IST)
சுடுகாட்டில் அமர்ந்து தியானம் செய்தோ அல்லது கிளி ஜோசியம் பார்த்தோ பதவி பெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடுமையாக பேசியுள்ளார்.
 
தேர்தலில் போடியிடும் அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நேற்று நிலையில் நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது காங்கிரஸ்.
 
அந்த அறிவிப்பின்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், சுடுகாட்டில் அமர்ந்து தியானம் செய்தோ அல்லது கிளி ஜோசியம் செய்தோ பதவி பெற விரும்பவில்லை எனவும் மக்கள் நலனுக்காக பாடுபடுவதையே குறிக்கோளாக வைத்திருப்பதாகவும், 50 வருட அரசியலில் கரைபடியாத கரம் என பெயர் எடுத்துவைத்திருப்பதாகவும் கூறினார். 
 
தேனி தொகுதியில் மதவாத சக்திகளை அழித்து, நான் அமோக வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இவர் ஓபிஎஸ்சையும், ஹெச்.ராஜாவையும் தான் இப்படி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்