தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதிமுகவின் கோட்டை என்று இருந்த பல வார்டுகளை திமுக கைப்பற்றி வருவதால் அதிமுக பெரும் பின்னடவை சந்திதுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. குச்சனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல உள்ளாட்சி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஊரான எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.