தல அஜித்தின் பிறந்த நாள் மே 1ஆம் தேதி என்பது உலகமே அறிந்தது. இந்த நிலையில் ஆர்வக்கோளாறு காரணமாக ஒரு விஜய் ரசிகர் அஜித்தின் உண்மையான பிறந்த நாள் மே 7ஆம் தேதிதான் என்றும், இந்த தகவல் 1996ஆம் ஆண்டு விக்கிபீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் ஒரு ஸ்க்ரீன் ஷாட் மூலம் டுவிட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதன் பின்னர் தான் மே 1 என்று விக்கிபீடியாவில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மிமி கிரியேட் செய்துள்ளார்.