தம்பியின் ஜோடியை வளைத்துப் போட்ட அண்ணன்

திங்கள், 24 ஜூலை 2017 (16:36 IST)
தம்பிக்கு ஜோடியாக நடித்த நடிகையை, தன்னுடைய அடுத்த படத்தில் ஜோடியாக்கிவிட்டார் அண்ணன் நடிகர்.



 
‘சதுரங்க வேட்டை’ படத்துக்குப் பிறகு வினோத் இயக்கியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. தம்பி நடிகர் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், தெலுங்கு நடிகை ஹீரோயினாக நடித்துள்ளார். தம்பி நடிகருக்கு தெலுங்கிலும் பெரிய மார்க்கெட் இருப்பதால், அங்கு முன்னணியில் இருக்கும் இந்த நடிகையை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர்.

இந்நிலையில், அண்ணன் நடிகர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம் தெலுங்கு நடிகை. ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘மன்னவன் வந்தானடி’, ‘வணங்காமுடி’ படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் அண்ணன் நடிகர். அந்தப் படத்தில், தெலுங்கு நடிகைதான் ஹீரோயின். மகேஷ்பாபு ஜோடியாக தெலுங்கு நடிகை நடித்துள்ள ‘ஸ்பைடர்’, தமிழிலும் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்