20 C-யில் சம்பளம் கேட்கும் சிவமான நடிகர்!

சனி, 29 ஏப்ரல் 2017 (13:14 IST)
தமிழ் தனியார் தொலைக்காட்டியில் இருந்து சினிமாவிற்கு வந்த அந்த நடிகர் தற்போது முன்னணி நடிகைகளுடன் நடித்து வருகிறார்.


 
 
அதில் முக்கியமான ஒன்று பெரிய நம்பர் நடிகையுடன் அவர் நடித்து வருவது. சினிமாவுக்கு வந்த சில காலங்களிலேயே பிரபலம் அடைந்து விட்டதால் ஹீரோவின் கால்ஷீட்டுக்காக ஒரு டஜன் கம்பெனிகள் வரிசையில் நிற்கின்றன. 
 
ஆனால் நடிகரோ சொந்தக் கம்பெனிக்கு மட்டுமே நடிப்பேன் என பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் சில வளர்த்து விட்ட கம்பெனிகள் கேட்டுக் கொண்டதால், 20 கோடி சம்பளம் கொடுங்க நடிக்கிறேன் என கூறினாராம்.
 
ஹிரோவின் கணக்கு படி, சொந்தக் கம்பெனியில் படம் பண்ண லாபம் எல்லாம் அவருக்கே. என்வே தான் வெளி கம்பனிக்கு படம் பண்ண 20 கோடி வேண்டும் என்கிறாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்