திருப்பதியில் அஞ்சலி-ஜெய் திருமணம்? பரபரப்பு தகவல்

திங்கள், 19 ஜூன் 2017 (06:56 IST)
பிரபல நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அஞ்சலி பிறந்த நாளில் ஜெய் தனது டுவிட்டரில் உருக்கமான வாழ்த்து ஒன்றை தெரிவித்திருந்தார்.



 


இந்த நிலையில் அஞ்சலிக்கும் நடிகர் ஜெய்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அஞ்சலி உறவினர்கள் 'அஞ்சலிக்கும், ஜெய்க்கும் வருகிற டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” என்று கூறியதாக தெலுங்கு முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து அஞ்சலி மற்றும் ஜெய் எந்தவித தகவலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கவில்லை. ஜெய்-அஞ்சலி திருமண செய்தி வதந்தியா? அல்லது உண்மையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்