சின்ன நம்பர் நடிகைக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு

வியாழன், 8 ஜூன் 2017 (15:15 IST)
சின்ன நம்பர் நடிகைக்கு எதிராக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.


 


2010 – 2011ஆம் ஆண்டுக்காக சின்ன நம்பர் நடிகை சமர்ப்பித்த வருமானக் கணக்கில், சில படங்களுக்காக அட்வான்ஸ் வாங்கிய மூன்றரை கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையைச் சேர்க்காமல் விட்டுவிட்டார். இதைக் கண்டுபிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அந்தத் தொகையையும் சேர்த்து வருமானக் கணக்கை சமர்ப்பித்தார் நடிகை.

ஆனால், வருமானவரித்துறை சுட்டிக் காட்டியபிறகே அவர் கூடுதல் தொகையைச் சேர்த்ததால், சட்டப்படி அவருக்கு ஒரு கோடியே 11 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார் நடிகை. ‘வருமானக் கணக்கைத் திருத்தம் செய்து சமர்ப்பித்த பிறகும் அபராதம் விதிப்பது முறையல்ல’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். நேற்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்