விடாது கருப்பு

செவ்வாய், 15 ஜூலை 2014 (11:22 IST)
படம் தயாரிப்பது சுலபம். எடுத்த படத்தை விற்பதுதான் கடினம். படம் எடுத்துவிட்டு அதனை விற்க முடியாமல் கோடம்பாக்கத்தில் நுரை தள்ளிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை சில நூறுகள். அதில் விரும்பிப் போய் விழுந்திருக்கிறார் கருப்பு காமெடியர்.
 
தோற்றத்தில் அப்பாவியாக தெரியும் இவர் வேறொருவரை ஹீரோவாகப் போட்டு ஒரு படத்தை தயாரித்தார். நடித்தவர்களுக்கும் வேலை செய்தவர்களுக்கும் சரியான பேட்டா சம்பளம் எதுவும் தரவில்லை காமெடியர். அந்த விஷயத்தில் அவர் வில்லன் என்று இன்றும் முணுமுணுக்கிறார்கள்.
 
ஒருவழியாக படம் முடிந்தது. ஆனால் யாரும் படத்தை சீண்டவில்லை. கையிருப்பு கரைந்து போன நிலையில் மேலும் கொஞ்சம் பணம் இருந்தால் மட்டுமே படத்தை ஏதாவது செய்ய முடியும். தெரிந்தவர்கள் யார் எதிர்பட்டாலும் படாரென பண உதவி கேட்கிறாராம் காமெடியர். அதனால் அவர் அந்தப் பக்கம் வருகிறார் என்றால் இந்தப் பக்கமாக எஸ்கேப்பாகிவிடுகிறார்களாம் அவருக்கு தெரிந்தவர்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்