நான் அப்படி சொல்லவேயில்லை

வியாழன், 3 ஜூலை 2014 (12:08 IST)
பரோட்டா காமெடியரை தொடர்ச்சியாக தனது படங்களில் நடிக்க வைக்கும் திட்டத்திலிருக்கிறாராம் சேனாதிபதி. 
 
இந்த நேரத்தில் அல்டிமேட்டின் படத்தில் நடிக்க பரோட்டா நடிகருக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதனை வேண்டாம் என்று மறுத்துள்ளார் பரோட்டா. சேனாதிபதியுடன் நடிப்பதால்தான் அல்டிமேட்டின் படவாய்ப்பை அவர் மறுத்தார் என ஒரு தரப்பு பேசி வருகிறது. 
 
இயக்குனர் சொன்ன கதையில் அல்டிமேட்டை நான் கண்டபடி திட்டுவது போல் காட்சி உள்ளது. அவர் மீது நான் அவ்ளோ மரியாதை வச்சிருக்கேன். அவரைப்போய் திட்டுறதா? அதனால்தான் நடிக்க மறுத்தேன் என பரோட்டா நடிகர் வேறொரு காரணம் சொல்கிறார்.
 
உண்மை அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்