இந்த விஷயத்தில் இவர்தாங்க லேடி சூப்பர்ஸ்டார்

வியாழன், 26 ஜூன் 2014 (11:07 IST)
எந்த செய்தியும் இல்லை என்றால் உச்ச நடிகரைப் பற்றி ஏதாவது - அரசியலில் குதிப்பார் என்றோ, புதிய படத்தில் நடிப்பார் என்றோ, இமயமலை ஏறுவார் என்றோ - ஏதாவது எழுதி பத்திரிகையை பரபரப்புக்குள்ளாக்குவது சில மீடியாக்களின் வேலை. அந்த இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் நம்பர் நடிகை.
 
எதுவும் இன்ட்ரஸ்டிங்கா இல்லையென்றால் இவரின் தலைதான் உருட்டப்படும். அபி படத்தில் அறிமுகமான உசர நடிகருடன் ஒரு படத்தில் நம்பர் நடித்து வருகிறார். இத்தனைக்கும் படத்தின் ஹீரோ வேறொருவர். படப்பிடிப்பு இடைவேளையில் உசர நடிகரும், நம்பர் நடிகையும் பேசுவதை வைத்து இருவருக்கும் காதல் என்று கதைகட்டிவிட்டார் கற்பனைவளமிக்க ஒருவர். 
 
இரண்டுமுறை சூடுபட்ட பூனை அவர், அவ்வளவு சீக்கிரம் காதல் பக்கம் போவாரா... இது கட்டுக்கதை என காதை கடிக்கிறது சம்பந்தப்பட்ட படயூனிட்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்