கார்ப்பரேட்டுக்கு கல்தா

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (15:04 IST)
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பாலிசி. அல்டிமேட்டுக்கு கார்ப்பரேட் தயாரிக்கும் படங்கள் என்றால் அலர்ஜி. கார்ப்பரேட்டுடனான முந்தைய அனுபவம் இப்போதும் முள் கிரீடமாக குத்திக் கொண்டிருப்பதால் கார்ப்பரேட் கால்ஷீட் கேட்டு வந்தால் ஒரேயடியாக மறுத்துவிடுகிறார்.
 
ஆனால் இன்றைய கார்ப்பரேட் உலகில் அப்படியெல்லாம் தவிர்க்க முடியுமா? படத்தை தயாரிப்பதுதான் வேறு ஆள்கள். ஆனால் அதன் விநியோக உரிமையை ஏதாவது கார்ப்பரேட் கம்பெனிகள்தான் வாங்குகின்றன. அல்டிமேட் நடிக்கும் புத்த இயக்குனரின் பெயரிடப்படாத படத்தின் விநியோக உரிமையையும் ஒரு கார்ப்பரேட் கம்பெனிதான் வாங்கியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்