செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால் விண்மீன்கள் கை யில் வருமா?

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (14:55 IST)
கருத்து நடிகை போகிற இடமெல்லாம் அம்மணியின் பேச்சை கேட்க கூட்டம் அம்முகிறது. அதே மாதிரி ஒரு அட்ராக்ஷன் நமக்கு இல்லையே என்று தேசியகட்சிக்கு வருத்தம். கோடிகள் போனால் என்ன... பிரபலமான லேடியாக பிடித்து வாருங்கள் என்ற கட்டளையை ஏற்று நம்பர் நடிகையிடம் தூது சென்றிருக்கிறார்கள். ஏதாவது துக்கடா நடிகை என்றால் இவர்களின் பேரத்துக்கு படிந்திருப்பார்.
 
மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நம்பர் காலாவதியான கட்சிக்கு பிரச்சாரம் செய்து கரியரை கெடுத்துக் கொள்வாரா. இந்த அடிப்படைகூட தெரியாமல் நடிகையை அணுக, அவர் ஒரேயடியாக முடியாது என்று மறுத்திருக்கிறார். தன்னைத்தானே காமெடி பீஸாக்கிக் கொள்வதில் அண்ணன்களை அடிக்க முடியாது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்