சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, சினிமாக்காரர்கள் மீடியாக்களை அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. அதிலும் இந்த ட்விட்டர் ஃபேமஸான பிறகு, எல்லாவற்றையும் அதிலேயே ரிலீஸ் செய்து கொள்கிறார்கள். மீடியாக்கள் பேட்டி கேட்டால் கூட தராதவர்கள், ட்விட்டரில் மட்டுமே தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதிலும் வம்பு ஒருபடி அதிகப்பிரசிங்கித்தனமாகவே செயல்பட்டு வந்தார். சமீபத்தில் கூட, ‘நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதவரை என்னுடைய அடுத்த படம் பற்றி ஊகங்களை எழுத வேண்டாம். நான் ட்விட்டரில் என்ன பதிவிடுகிறேனோ, அதை மட்டும் வெளியிட்டால் போதும்’ என மீடியாக்களை கேவலமாகக் குறிப்பிட்டிருந்தார்.
அப்படிப்பட்ட வம்பு, ட்விட்டரில் இருந்தும் விலகியிருக்கிறார். அவரைப் பற்றிய விமர்சனங்களையும், கேலிகளையும் எதிர்கொள்ள முடியாமலேயே அவர் விலகிவிட்டதாகக் கூறுகிறார்கள். அத்துடன், இப்போது எந்தப் படமும் ரிலீஸுக்கு இல்லை என்பதால், ட்விட்டரில் இருந்து விலகியிருக்கிறார். அடுத்த படத்தின் ரிலீஸ் நெருங்கும்போது, ‘இதயம் இனித்தது… கண்கள் பனித்தது…’ எனச் சொல்லி மறுபடியும் ட்விட்டருக்கு வந்துவிடுவார் வம்பு என்கிறார்கள்.