ரஜினி லெஜண்டாம்… விஜய் சூப்பர் ஸ்டாராம்… உளறிய நடிகை

சனி, 24 ஜூன் 2017 (21:09 IST)
தற்போது வெளியாகியுள்ள காடு தொடர்பான திரைப்பரத்தில் நடித்துள்ள நடிகை ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவர் விவரம் புரியாமல் உளறியுள்ளார்.  


 

 
நேற்று வெளியான காட்டைப் பற்றிய படத்தில், ஹீரோயினாக நடித்தவர் இந்த நடிகை. படத்தின் புரமோஷனுக்காக, ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். ரஜினியைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அவர் ஒரு லெஜண்ட் மற்றும் மரியாதைக்குரியவர்’ என்று தெரிவித்தார். ‘உங்களுடைய ஃபேவரைட் நடிகர் யார்?’ என்ற கேள்விக்கு ‘அஜித்’ என்று பதிலளித்தார்.
 
சிம்புவைப் பற்றிய கேள்விக்கு, ‘சூப்பர்ப்… அருமையான நடிகர்’ என்றும், சிவகார்த்திகேயனைப் பற்றிய கேள்விக்கு, ‘திறமையான நடிகர்’ என்றும், சூர்யாவைப் பற்றிய கேள்விக்கு ‘ஃபெண்டாஸ்ட்டிக் நடிகர்’ என்றும் பதிலளித்துள்ளார். விஜய் குறித்து கேட்டதற்கு, ‘அவர் சூப்பர் ஸ்டார், கிங்’ என்று பதிலளித்துள்ளார். இதனால், ரஜினி ரசிகர்கள் அவர்மீது கோபத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்