தனிநபர் செக்யூ‌ரிட்டி

வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (17:44 IST)
படம் சம்பந்தமான விஷயங்கள் வெளியே கசியக் கூடாது என்பதில் படம் எடுக்கும் அனைவரும் உஷாராக இருப்பார்கள். சில இயக்குனர்கள் தனியார் செக்யூ‌ரிட்டியை நியமிக்கும் அளவுக்கு தீவிரம் காட்டுவார்கள். உச்சத்தின் மகள் தான் இயக்கும் அனிமேஷன் படம் சம்பந்தப்பட்ட எதுவும் வெளியேப் போகக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

படம் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ள கம்ப்யூட்டரை இவரைத் தவிர வேறு யாரும் அ‌க்செஸ் பண்ண முடியாது. இவ‌ரின் அனுமதி இன்றி அணுவும் அசையாது. அந்தளவுக்கு தானே முன்னின்று அனைத்தையும் கவனிக்கிறார். படத்தையாவது பார்க்க அனுமதிப்பார்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்