கமல் படத்தில் மீண்டும் மோகன்லால்?

வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (16:20 IST)
கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்தார் மோகன்லால். அப்போதே இந்த நட்பு இத்துடன் முடியாது, தொடரும் என்று அறிவித்திருந்தனர்.
FILE

கமல் அடுத்து மெகா பட்ஜெட் படமொன்றில் நடிக்கிறார். இந்தப் படத்தை அவரே இயக்குவார் என‌த் தெ‌ரிகிறது. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளின் முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கக்கூடும் என்று நேற்றுதான் தெ‌ரிவித்திருந்தோம். லேட்டஸ்ட் தகவல், கமலுடன் மீண்டும் இணைகிறாராம் மோகன்லால்.

உறுதி செய்யப்படாத இந்தத் தகவல் கமல் பட அறிவிப்பை வெளியிடும் போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படும் என்கின்றனர். அதேபோல் தெலுங்கு நடிகர் ரவிதேஜாவும் இந்தப் படத்தில் நடிக்க அதிக சாத்தியமுள்ளதாக ஆந்திரா பக்கமிருந்து வரும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்