அவரையே வேண்டாம்னுட்டேன்

புதன், 16 ஏப்ரல் 2014 (16:03 IST)
ஷேக்ஸ்பியரின் காதல் ஜோடி பெயரில் ஒரு படம் தயாராகிறதல்லவா... அதில் ஜெயம் நாயகனுக்கு இணை மொத்வானி நடிகை. முதலில் இந்தக் கதையை இயக்குனர் நயனத்திடம்தான் கூறினாராம். 
 
அவர் தயாரித்த திருடனின் காதலி படத்தில் நயனம்தான் ஹீரோயின். அந்த நட்பில் கதையை கேட்ட நடிகை, கதை பிடித்து நடிக்கவும் சம்மதித்தாராம். ஆனால் அவரை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் இயக்குனர். ஏன்? 
 
ஜெயத்துடன் நயனம் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் வெளிவராத நிலையில் உடனே அவரையே மீண்டும் ஜோடியாக்கினால் நன்றாக இருக்காது இல்லையா... அதுதான் ஆளை மாத்திட்டேன் என்றார் இயக்குனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்