அண்ணனுக்கு ஒரு ஸ்பெஷல் ஆப்பு

செவ்வாய், 22 ஜூலை 2014 (13:27 IST)
சமீபத்தில் திரைக்கு வந்த செஸ் ஹண்டிங் படத்தின் வில்லன் செந்தமிழில் பேசுவதாக கேரக்டர் அமைத்துள்ளனர். அதன் குணநலன்கள் அண்ணன் சிவப்பு தமிழனை போல் இருப்பதாக தம்பிகள் கிசுகிசுக்கின்றனர்.
 
செஸ் ஹண்டிங்கை வெளியிட்டிருக்கும் இயக்குனர் பிரகாச ஹீரோவுக்கு முதலில் சொன்ன கதை அண்ணன் சிவப்பு தமிழருக்கு உரியது. அண்ணன் இதனை அம்பலப்படுத்தியதும் வேறொரு கதையை தயார் செய்து படத்தையும் முடித்துவிட்டார். அந்த அவமானத்துக்கு பழிவாங்கவே சிவப்பு தமிழரைப் போலிருக்கும் வில்லன் கதாபாத்திரம் கொண்ட செஸ் ஹண்டிங்கை வாங்கி வெளியிட்டார் என்கின்றனர்.
 
உண்மையா?

வெப்துனியாவைப் படிக்கவும்