அலேக்காய் 99 ரூபாயை தூக்கிய வோடஃபோன்! – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

செவ்வாய், 2 ஜூன் 2020 (12:54 IST)
வெளிநாட்டு அழைப்புகளுக்கு கட்டணமாக ரூ.99 – ஐ வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காமலே வோடபோன் நிறுவனம் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய ரீசார்ஜ் நிலவரப்படி அனைத்து கால்களும் ரீசார்ஜ் ப்ளான்களுக்குள் அடங்குவதாக இருப்பதாலும், ப்ரீபெய்ட் என்பதாலும் இதர கட்டணங்கள் திடீரென வசூலிக்கும் நடைமுறை பல நெட்வொர்க் நிறுவனங்களில் இல்லை. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு யாருமே அழைப்பு விடுக்காத நிலையிலும் வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் ப்ரீபெய்ட் கணக்கிலிருந்து 99 ரூபாய் அனுமதியில்லாமல் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து வோடபோன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தும் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என வாடிக்கையாளர்கள் சமூக வலைதளத்தில் வோடபோனை சாடி பதிவுகளை இட்டு வருகின்றனர். எனினும் இதுவரை இதுகுறித்து வோடபோன் நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

திடீரென தங்கள் கணக்குகளில் இருந்து 99 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்