புதிய ஸ்மார்ட்போனில் இலவச இண்டர்நெட்: மலிவு விலையில் அறிமுகம்

சனி, 23 ஜனவரி 2016 (20:47 IST)
பிரபல இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான டேட்டாவிண்ட், மலிவு விலையில் இரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் மூலம் ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


 
 
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான டேட்டாவிண்ட், குறைந்த விலையில் இரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் பாக்கெட்சர்ஃபர் 2G4Xயின் விலை ரூ.2,499  , பாக்கெட்சர்ஃபர் 3G4Zயின் விலை ரூ.3,999 வழங்க உள்ளது.
 
டேட்டாவிண்ட் நிறுவனத்தின் இரு போன்களும் இந்தியாவின் அனைத்து போன் மார்க்கெட்டிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன்கள் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாக்கெட்சர்ஃபர் 2G4X மொபைல் போனில் 3.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள்-கோர் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்குவோர் ரிலையன்ஸ் மற்றும் டெலிநார் சிம் கார்டுகளின் மூலம் ஒரு ஆண்டு முழுவதும் இலவசமாக இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இலவச இண்டர்நெட் கொண்டு ஆடியோ, வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கம் போன்றவைகளை மேற்கொள்ள முடியாது, ஆனால் ப்ரவுஸிங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்