இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய டாடா மோட்டார்ஸின் டிரக் வாகனங்களின் பிரிவு தலைவர் ராஜேஷ் கவுல்: கட்டுமான வர்த்தக வாகனங்களின் பிரிவில், டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள தேவையான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாகவே, "எக்ஸ்கான்' கண்காட்சியில், கட்டுமானம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தேவைப்படும், டாடா பிரைமா 3138-கே 32 கம் கோல் டிப்பர், டாடா பிரைமா எல்எக்ஸ் 2523-கே ரெப்டோ, டாடா பிரைமா எல்எக்ஸ் 3128-கே 19 கம் ஸ்கூப் எச்ஆர்டி, டாடா எஸ்.ஏ.கே. 1613 வாகனங்கள் ஆகிய 4 வாகனங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.