வரிசைக்கட்டி வரும் கேலக்சி(ஸ்): மொத்த வித்தையையும் இறக்கும் சாம்சங்!
வெள்ளி, 5 ஜூன் 2020 (02:08 IST)
சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
# ARM மாலி-G52 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், சாம்சங் பே
# 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
# 8 எம்பி 123° அல்ட்ரா-வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 20 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங்
விற்பனை விவரம்:
ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் இதன் விலை ரூ. 21,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட், அமேசான், சாம்சங் இந்தியா வலைதளம், சம்சங் ஒபேரா ஹவுஸ் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.