ஜியோ பயனர்களுக்கு நற்செய்தி!! மார்ச் வரை நீலும் இலவச சேவை

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (12:24 IST)
ஜியோ தனது சேவைகள் அனைத்தையும் இலவசமாக வழங்கும் காலக்கெடு டிசம்பர் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதாக டிராய் அறிவித்தது. ஆனால் அது டிசம்பர் 31 வரை இருக்கும் என ரிலையன்ஸ் அறிவித்தது.

 
தற்போது கிடைத்துள்ள, புதிய தகவல்களின் படி ரிலையன்ஸ் ஜியோ டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவைகளை மார்ச் 2017 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கலாம் என தெரிகிறது.
 
100 மில்லியன் பயனாளர்களை அடைய ரிலையன்ஸ் ஜியோ தனது அறிமுகச் சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 
 
ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
 
டிராய் விதிமுறைகளின் படி எந்த டெலிகாம் நிறுவனமும் தனது சேவைகளை 90 நாட்களுக்கும் அதிகமாக இலவசமாக வழங்க முடியாது. 
 
ஆனால், பயனர்களுக்கு இலவச ஜியோ சேவைகளை வழங்க டிராய் அனுமதி தேவையில்லை என்று ஜியோ தெரிவித்துள்ளது. 
 
இன்டர்கணெக்ஷன் சார்ந்த பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் வரை ஜியோ பல்வேறு வித்தியாச தீர்வுகளைப் பெற முயற்சிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டிராய் மற்றும் ரிலைன்ஸ் ஜியோ விதிமுறைகளை வைத்துப் பார்க்கும் போது ஜியோ தனது சேவைகளை நீட்டிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெலிகாம் சந்தையைச் சேர்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்