ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: தொலைதொடர்பில் புரட்சி, அண்ட்ராய்டு லேண்ட்லைன் விரைவில்!!

திங்கள், 14 நவம்பர் 2016 (13:48 IST)
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 4ஜி வோல்ட் சார்ந்த ஹோம் தொலைபேசி ஒன்றை தொடங்கும் நோக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறது.


 
 
இதன் முக்கியமான சிறப்பம்சம் இந்த சாதனம் ஒரு வழக்கமான லேண்ட்லைன் தொலைபேசியாக தான் இருக்கும் ஆனால் இது அண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையாக கொண்டு இயங்கும். 
 
4ஜி நெட்வொர்க்:
 
இந்த புதிய சாதனமானது ஒரு பாரம்பரிய தரைவழி தொலைபேசியை போன்றதே என்றாலும் அது வழக்கமான காப்பர் கம்பிகள் மூலம் இணைப்பை பெறாது. 4ஜி மூலம் நெட்வொர்க் இணைப்பை பெறும். அதாவது இந்த சாதனத்தை போகும் இடமெல்லாம் கொண்டு சென்று செயல்படுத்த முடியும்.
 
எல்டிஇ சிக்னல்:
 
இந்த குறிப்பிட்ட கம்பியில்லா தொலைபேசியில் ஒரு இரட்டை செயல்பாடு ஆண்டெனா உள்ளது. இந்த ஆண்டெனா மூலம் எல்டிஇ சிக்னலை பெற முடியும்.
 
இரட்டை செயல்பாடு மூலம் செயலாக்கப்படும் ஆண்டெனா உதவியுடன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ல் இருந்து ஹோம்பு தொலைபேசியை ஒரே நேரத்தில் 5 சாதனங்களுடன்வரை இணைக்க முடியும்.
 
எச்டி தர குரல் அழைப்பு:
 
இந்த கருவியானது 4ஜி வோல்ட் பயன்படுத்துவது மூலம் பயனர்கள் எச்டி தர குரல் அழைப்புகளை அனுபவிக்க முடியும்.
 
3.5 இன்ச் டச் ஸ்க்ரீன்:
 
எஸ்எம்எஸ் பரிமாற்றம் மற்றும் ஸ்மார்ட்டிவிக்களில் யூட்யூப் காஸ்கேடிங்தனை ஹோம் போன் கொண்டுள்ள ஆண்ட்ராய்டு ஓஎஸ் பயன்படுத்தி நிகழ்த்திக்கொள்ள முடியம். 
 
இது 3.5 இன்ச் டச் ஸ்க்ரீன் மற்றும் ஆண்ட்ராய்டு 5.1 மூலம் இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்