நமது போனில் ரகசியத்தை திருடும் 'Pink Whatsapp' - எச்சரிக்கும் கிரைம் போலீசார்!

புதன், 21 ஏப்ரல் 2021 (13:12 IST)
வாட்சப் மெசேஜிலும் பிங்க் வாட்ஸப் என்ற லிங்க் ஒன்று பரவியது அதனை யாரும் தரவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
அனைத்து வாட்ஸப் குழுக்களுக்கும் இந்த பிங்க் நிற வாட்ஸப் என்ற ஒரு லிங்க் பரவியது. அதில் அந்த பிங்க் வாட்ஸப் என்பது வாட்ஸப் நிறுவனத்தின் அதிகாரபூர்வ லிங்க் எனவும் அதனை பதிவிறக்கம் செய்தால் நமது வாட்ஸப் பிங்க் நிறமாக மாறும் என்றும் வதந்தி கிளம்பியது.
 
அதனை அறியாத சிலர் அதனை தொட்டாலே சில தகவல்கள் அவரது பெயரில் பல குழுக்களுக்கு செல்வதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் அதனை விசாரிக்க முடிவு செய்த சைபர் கிரைம் போலீசார் களத்தில் இறங்கினர். பிங்க் நிற வாட்ஸப் என்பது புரளி என்பது தெரிய வந்தது.

மேலும் அது வாட்ஸப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லிங்க் இல்லை என்பதையும் போலீசார் உறுதிபடுத்தினர். பொதுவாக சந்தேகத்தின் அடிப்படையில்  பார்வேர்ட் மேசஜில் வருகின்ற லிங்க்கை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று ஏற்கனவே காவல்துறை தெளிவுபடுத்திய நிலையில் மீண்டும் இதனை போலீசார் உறுதிபடுத்தினர். மேலும் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர், கூகுள் போன்றவற்றில் உள்ள 'அப்'களை மட்டுமே பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் போலீசார் கேட்டு கொண்டனர்.
 
 இவ்வாறாக பிங்க் வாட்சப் என்று வரும் சில லிங்க் மக்களின் தகவல்களை ஹேக் செய்யும் விதமாக அமையக்கூடும் என்றும் சென்னை அடையார் துணை ஆணையர் விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்