கடந்த சில வருடங்களாகவே AI என சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு என சொல்லப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது.. இனி வரும் காலங்களில் ஏஐ வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைதான் உருவாகியிருக்கிறது.
மேலும் AI காரணமாக சாஃப்ட்வேர் துறையில் பணிபுரியும் பலரும் வேலை இழப்பார்கள் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.. எனவே சாப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் AI வளர்ச்சிக்கு ஏற்றார்போல தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.. அந்த தொழில்நுபத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என மென்பொருள் நிபுணர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்..
இந்நிலையில்தான் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ORACLE சுமார் 30 ஆயிரம் ஊழியர்களை இன்று காலை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.. அதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 12 ஆயிரம் பேருக்கு வேலை பறிபோகியிருக்கிறது.
இன்று காலை 6 மணிக்கு ஊழியர்களின் இமெயில் முகவரிக்கு இந்த தகவலை ஆரக்கள் அனுப்பியிருக்கிறது..
எனவே அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் தங்கள் வேதனைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். AI சார்ந்த மறுசீரமைப்பால் பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது..