ரத்து செய்யப்பட்ட ஜியோ சேவை: அம்பானி புதிய அறிவிப்பு!!

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (10:13 IST)
டிராய் அமைப்பின் அறிவுருத்தலுக்கு இனங்க ஜியோ சம்மர் சலுகை ரத்து செய்யப்படுவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 


 
 
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, வாடிக்கையாளர்களுக்கு பிரைம் சேவைகள் உட்பட அனைத்து சேவைகளையும் இலவசமாக அளித்தார். 
 
கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் இலவச சேவை முடிவடைந்தது. இதனால் ரூ.99 செலுத்தி ஜியோ பிரைமில் இணைந்து, மாதம் ரூ.303 கட்டணத்தில் டேட்டா, இலவச அழைப்பு வசதி மட்டுமின்றி அனைத்து பிரைம் சேவைகளையும் பெறலாம் என அறிவித்தார்.
 
பின்னர் இது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டது. அதோடு, பிரைம் வாடிக்கையாளராக சேர்ந்தவர்களுக்கு, காம்ப்ளிமென்டரி அடிப்படையில் மேலும் 3 மாதம் இலவச சேவையை நீட்டித்தது. 
 
இந்நிலையில், இந்த 3 மாத காம்ப்ளிமென்டரி சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்ற டிராய் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் காம்ப்ளிமென்டரி சலுகைகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தது.
 
ஆனால், இந்த ரத்துக்கு முன்பு திட்டத்தில் சேர்ந்தவர்கள் 3 மாத இலவச சேவையை பலன்பெற தகுதியுடையவர்கள் என ஜியோ தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்