தற்போது, ஸ்மார்ட்போனில் கூகுளின் ஆன்ட்ராய்டு ஆதிக்கம் செய்துவரும் நிலையில், அதற்கு போட்டியாக விண்டோஸ் இயங்குதளத்தை கொண்டுவர தீவிர முயற்சியில் மைக்ரோசாப்ட் களம் இறங்கியுள்ளது. ஆப்பிளின் மேக் புக்கிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட்டின் சர்பேஸ் புக் புதிய லேப்டாப் வெளிவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் இந்த லேப்டாப் புதிய பரிணாமத்தை அடையும் என கணிப்பொறியளார்கள் கூறுகின்றனர்.
இண்டெல் ஐ.5, ஐ.7 பிராசசர்களுடன் வெளிவரும் இந்த லேப்டாப், நல்ல கிராபிக்ஸ் திறனுடன் இயங்கும் வகையிலும், டச் ஸ்கிரீனுடனும் உள்ளது. இரண்டு யூ.எஸ்.பி. போர்ட்டுகளும், அனைத்துவகை மெமரி கார்டுகளையும் போடுவதற்கு பிரத்யேகமாக ஸ்லாட் ஒன்றும் தரப்பட்டுள்ளன. 700 கிராம் மட்டுமே எடை கொண்ட சர்பேஸ்புக் லேப்டாப், ஸ்கிரீனை கீபோர்டிலிருந்து தனியாக பிரித்து எடுத்துவிட்டு, டேப்லட் போலவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.