2023 புத்தாண்டுக்கு ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் ஆஃபர்!

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (13:46 IST)
2023ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2023க்கு புதிய ரீசார்ஜ் ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

2023ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகை ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்துகின்றன. அவ்வாறாக ஜியோ ரூ.2023க்கு சிறப்பு ரீசார்ஜ் ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

₹2023 திட்டம்:

1. அன்லிமிடெட் டேட்டா - 630 ஜிபி (2.5ஜிபி/ ஒரு நாள் அதிவேக டேட்டா அதன் பிறகு வரம்பற்ற 64kbps Speed)
2. அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி
3. 100 SMS/நாள்
4. ஜியோ செயலிகளுக்கு இலவச சந்தா
5. செல்லுபடியாகும் காலம் - 252 நாட்கள் (28 நாட்கள் x 9 சுற்றுகள்)

குறிப்பு - புதிய ஆன்-போர்டிங்கிற்கு இலவச பிரைம் மெம்பர்ஷிப் பொருந்தும்


இதுதவிர 365 நாட்களுக்கான மொத்த ஒரு வருட ரீசார்ஜ் பேக் உள்ளது. இதன் விலை ரூ.2999. இதன் சிறப்பம்சங்கள்

1. அன்லிமிடெட் டேட்டா – 912.5 ஜிபி (2.5ஜிபி/நாள் அதிவேக டேட்டா அதன் பிறகு வரம்பற்ற 64kbps Speed)
2. அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி
3. 100 SMS/நாள்
4. ஜியோ செயலிகளுக்கு இலவச சந்தா
5. செல்லுபடியாகும் காலம் -365 நாட்கள் (ஒரு வருடம்)

கூடுதல் சிறப்பம்சங்களாக ரீசார்ஜ் முடிந்து 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி மற்றும் 75 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டா கிடைக்கும்.

 75ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 23 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் வவுச்சர்கள் ரீசார்ஜ் செய்த அதே நாளில், பிரச்சாரத்திற்குப் பின் நேரலையில் வழங்கப்படும்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்