இந்திய விண்வெளித்துறை நிலாவை ஆராய்வதற்கு முதன்முதலாக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி விண்ணில் ஏவியது. இதையடுத்து 2009ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி முதல் சந்திராயன்-1 விண்கலத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அந்த விண்கலம் தொலைந்து விட்டதாக கருதியது.