தகவல் தொழில்நுட்ப வளர்சியால் பலரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வரும் நிலையில் ஸ்மார்ட் போனில் முக்கியமான இயங்குதளமாக ஆண்ட்ராய்டு இருந்து வருகிறது. இந்த ஆண்ட்ராய்டு தளத்தில் செயல்பட கூடிய செயலிகள் கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இந்நிலையில் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை அடிக்கடி சோதனைக்குட்படுத்தி அவற்றை நீக்கும் வேலையையும் கூகிள் செய்து வருகிறது.