வெளியேறும் உயரதிகாரிகள் - தடுமாறும் டுவிட்டர்

புதன், 21 டிசம்பர் 2016 (17:11 IST)
டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் டுவிட்டரில் இருந்து விலகுவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இதனால் டுவிட்டர் நிறுவனம் தடுமாற்றத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
மைக்ரோசாப்ர், கூகுள் போன்ற நிறுவனங்களிடம் டுவிட்டர் நிறுவத்தை விறக முயற்சிகள் மேற்கொள்ள படுவதாக அண்மையில் தகவல்கள் வெளிவந்தன. அதோடு டுவிட்டர் நிறுவனம், செலவு குறைப்பு நடவடிக்கையாக வைன் என்ற வீடியோ சேவையை நிறுத்திக்கொண்டது.
 
மேலும் நிதி நெருக்கடி காரணமாக நூற்றுக்கணக்கான அதிகாரிகள் வெளியேற்றப்படனர். இந்நிலையில் டுவிட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆடம் மெஸிங்கர் மற்றும் துணைத்தலைவர் கோஸ் ஆகியோர் டுவிட்டரில் இருந்து விலகுவதாக இன்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
 
அதன்படி தொடர்ந்து அதிகாரிகளின் வெளியேற்றத்தால் டுவிட்டர் நிறுவனம் தடுமாற்றத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்