1 ரூபாய்க்கு ஒரு ஜிபி: அதிரடி காட்டும் பிஎஸ்என்எல்!!
சனி, 1 ஏப்ரல் 2017 (13:27 IST)
ஜியோவின் சேவைகள் முடிவுக்கு வந்தது என்று பிற நிறுவனங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த சம்மர் ஆஃபரை வழங்கி உள்ளதுஜியோ.
இதனால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் ஜியோவுக்கு நிகராக சலுகைகளை வழங்க மாறி மாறி கட்டணத்தை குறைத்து வருகிறது. இந்நிலையில் அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதிரடியின் உச்சத்தை தொட்டுள்ளது.
பிஎஸ்என்எல் முன்னெடுத்துள்ள இந்த திட்டம் வரம்பற்ற பிராட்பேண்ட் திட்டமாகும். இந்த திட்டம் செப்டம்பர் 9 முதல் கிடைக்கும்.
இதற்கு Experience Unlimited BB 249 என பெயரிடப்பட்டுளது. மாதத்திற்கு 300 ஜிபி டேட்டா வழங்கப்படும். இதன் மூலம் ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் 1 ஜிபி டேட்டா கிடைக்கும் என தெரிகிறது.