குவால்காம் ’ஸ்நாப் டிராகன் 821’ - முதன்முதலில் பயன்படுத்தும் ஆசஸ் ஜென்ஃபோன் 3 டீலக்ஸ்

புதன், 13 ஜூலை 2016 (15:11 IST)
ஆசஸ் நிறுவனம் குவால்காம் ஸ்னாப் டிராகன் 821யை பயன்படுத்திக் கொண்டு ஜென்ஃபோன் 3 டீலக்ஸ் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது.



 


சமீபத்தில் அதன் தலைமை ஜென்ஃபோன் 3 டீலக்ஸ் சிப்பை விரைவில் மேம்படுத்தி வெளியிடுவதாக கூறியிருந்தது. அறிவித்தது போல், குவால்காம் புதிய ஸ்னாப்டிராகன் 821 முதலில் பயன்படுத்தி ஜென்ஃபோன் 3 டீலக்ஸ் ஸ்மார்ட் போனை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது.

புதிய சிப்பான ஸ்னாப் டிராகன் 821, ஸ்னாப் டிராகன் 820யை விட  வி.ஆர் கம்ப்யூட்டிங் செயல்திறனை 10 சதவீதம் அதிகரிக்க செய்யும். புதிதாக மேம்படுத்தப்பட்ட ஸ்னாப் டிராகன் 821 6Gb ராம்(6GB RAM), 128GB உள் சேமிப்பு திறன் கொண்ட 32 ஜிபி சேமிப்பு, 256GB UFS முறையான 2.0 சேமிப்பு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இதன் விலை ரூ.50,000 கிடைக்கும் என யூகிக்கப்படுகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்