இந்நிலையில் பார்வையற்றவர்களுக்கு உதவும் வகையில் சந்தையில் ஒரு புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏபாலி என்று அழைக்கப்படும் இந்த செயலியை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தால் அவர்கள் தங்களுக்கு எதிரே இருக்க கூடிய பொருள் என்ன என்பதை அறிய முடியும். அதுமட்டுமின்றி தாங்கள் அறிய விரும்பும் பொருளின் பெயரை மொபைல் குரலால் சொல்ல அதை அவர்கள் கேட்ட முடியும்.
இந்த ’ஏபாலி’ செயலி எதிரே இருக்க பொருளை ஸ்கேன் செய்து அதனுடைய பெயரை துல்லியமாக குரலில் கொடுக்கும் தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி இப்போதைக்கு 7 மொழிகளில் பொருட்களின் பெயரை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விரைவில் இன்னும் அதிக மொழிகள் இதில் இணைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.