ஏர்டெல் பேமெண்ட் வங்கி: 10,000 பயனர்கள், இரண்டே நாட்களில்!!

திங்கள், 28 நவம்பர் 2016 (10:10 IST)
ஏர்டெல் பேமெண்ட வங்கி தொடங்கப்பட்ட இரண்டே நாட்களில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகள் தொடங்கியுள்ளனர்.


 
 
வங்கி சேவையை எளிமைப்படுத்தும் வகையில், கடந்த அக்டோபர் மாதம் 11 தனியார் நிறுவனங்கள் பேமெண்ட் வங்கி சேவையை தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. 
 
இதனை தொடர்ந்து இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி​ சேவையை ஏர்டெல்​ நிறுவனம் தொடங்கியுள்ளது. ஏர்டெல் பேமெண்ட் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு செய்யப்படும். 
 
மேலும் சேமிப்பு கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும் பணத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். 
 
வருங்காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு பலனளிக்க கூடிய பல்வேறு திட்டங்களை அறிவிக்கப்படும். 
 
மூன்றில் இரண்டு பங்கு கிராம மக்களுக்கு பயன்தர தக்க வைகையில் வங்கிகள் தொடங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்