6 ஆண்டுகளை கடந்த டிவிட்டர்....!

வெள்ளி, 23 மார்ச் 2012 (17:19 IST)
webdunia photo
FILE

சமூக ஊடக தளங்களில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய ிவிட்டர் 6 ஆண்டுகளில் 14 கோடி பயனர்களை பெற்றுள்ளது.

2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி தொடங்கப்பட்ட டிவிட்டர் தனது 6 வது பிறந்த நாளை தற்போது கொண்டாடியுள்ளது.

சமுக வலைத்தளமான ிவிட்டர் உடனுக்குடன் தகவல்களைப் பரிமாற உதவுகிறது.

தற்போது இந்த தளம் 14 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 34 கோடிக்கும் அதிகமான செய்திகள் பரிமாறப்படுவதாகவும் டிவிட்டர் தனது ப்ளாக்கில் தெரிவித்துள்ளது

இந்த டிவிட்டர் சமூக இணையதளம் சாதாரண மனிதர்களில் இருந்து பெரிய பிரபலங்கள் வரை பயன்படுத்துவது குறிப்பிடதக்கது.

News Summary:
Twitter revealed that over 140 million active users make 340 million tweets everyday.
The company disclosed the figure in an official blog posted after it completed six years of operations .

வெப்துனியாவைப் படிக்கவும்