3டி கிராஃபிக்ஸ் வசதியுடன் ஃபயர்ஃபாக்ஸ் 10

வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (16:11 IST)
மல்டிமீடியா அனுபவங்களை உருவாக்கும், பல்வேறு புதிய டெவலப்பர் கருவிகளைக் கொண்டு மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் 10 வெளியிடப்பட்டுள்ளது. இதை விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்களில் பயன்படுத்தலாம்.

முந்தைய பதிப்பில் ஏற்பட்ட குறைகளைச் சரி செய்தும் (எ.கா. புக்மார்க்குக்கு செல்லும்போது கிராஸ் ஆவது), புதிய டெவலாப்பர் கருவிகளைக் கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

கணினியின் முழுத்திரையையும் பயன்படுத்தும் மல்டிமீடியா அனுபவம் ஏற்படும். புதிய முழுத்திரை ஏபிஐ டெவலப்பர்களைக் கொண்டு வெப்கேம்களை உருவாக்கலாம். மேலும் மூன்றாம் தரப்பு மென்பொருள் இன்றி, வலைசார்ந்த கிராஃபிக்ஸை ஆதரிக்கும் வகையிலும் ஃபயர்ஃபாக்ஸ் 10 வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்