2007 -ல் கணினி விற்பனை 65 லட்சம்!

புதன், 27 பிப்ரவரி 2008 (17:33 IST)
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய கணினி சந்தை‌யி‌‌ல் கடந்த 2007 ஆம் ஆண்டு ம‌‌ட்டு‌ம் 65 லட்சம் கணினிகள் விற்பனையா‌கியு‌ள்ளது.

இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 விழுக்காடு கூடுதலாகும். கடந்த 2006 ஆம் ஆண்டில் கணினி விற்பனை 54 லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரோக்கியமான கணினி விற்பனை வளர்ச்சி விகித‌த்தா‌ல் தகவல் தொழில் நுட்ப‌ச் சந்தை வளர்ச்சியடைந்துடன் புதிய வளர்ச்சியை அதாவது வளர்ச்சி திட்டம் - 2.0 இ‌ல் காலடி எடுத்து வைப்பதாக அமைந்துள்ளது என்று ஐ.டி.சி.இந்தியா நிறுவனத்தின் மேலாளர் கபில்தேவ் சிங் கூறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் லேப்-டாப்கள் விற்பனையானது. இது 2007 ஆம் ஆண்டில் 18 லட்சமாக உயர்ந்துள்ளது. முதல் முறையாக கணினி வாங்குபவர்களின் விருப்பமாக லேப்-டாப்புகள் உள்ளன என்றும் கபில்தேவ் சிங் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்