ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் உஷார்: கூலிகன் வைரஸ் அபாயம்

வியாழன், 1 டிசம்பர் 2016 (16:07 IST)
தகவல்களை திருடும் மால்வேர் மொன்பொருளான கூலிகன், ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களின் கூகுள் அக்கவுண்ட்களை பாதித்து இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 

 
ஆண்ட்ராய்டு 4.0 கிட்கேட் மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் போன்ற இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தாக்கும்படி கூலிகன் மால்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 74 சதவீத ஆண்ட்ராய்டு கருவிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக செக் பாயிண்ட் என்ற மென்பொருள் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கூலிகன் தாக்குதல் மூலம் மின்னஞ்சல் முகவரிகள், அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள், கூகுள் போட்டோஸ் மற்றும் இதர சேமிப்புகள் போன்ற தகவல்களை திருட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமான கூகுள் அக்கவுண்ட்களை கூலிகன் மால்வேர் பதம் பார்த்திருக்கிறது.
 
கூலிகன் தற்போது நாள் ஒன்றுக்கு 13,000 கருவிகள் என ஆசியாவில் 57 சதவீத கருவிகளையும், ஐரோப்பாவில் சுமார் 9 சதவீத கருவிகளையும் தாக்கியுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் கூலிகன் மற்றும் இதர மால்வேர் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தாமல் இருப்பதோடு, ஸ்மார்ட்போனினை அப்டேட் செய்து வைப்பதும் அவசியம் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்