`ஐ.டி. துறை அடுத்த ஆண்டு வளர்ச்சியடையும்'

ஞாயிறு, 31 மே 2009 (12:53 IST)
மும்பையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான ஐ.டி.சி (IDC), உலக அளவில் ஐ.டி. துறை அடுத்த ஆண்டில் (2010) 2.9 விழுக்காடு வளர்ச்சியை எட்டும் என்றும், அதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வளர்ச்சி விகிதமானது 2012இல் 5.7 விழுக்காடாக உயரும் என்று ஐ.டி.சி தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் உலக அளவிலான ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள நிலையில், உலக ஐ.டி. துறையானது 1.8 விழுக்காடு வீழ்ச்சியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உலகளவில் தொலைத்தொடர்பு சேவைவகள் வளர்ச்சி 3.2 விழுக்காடு அளவு இந்த ஆண்டில் பின்தங்க நேரிடும் என்றும், 2012ஆம் ஆண்டில் இந்த துறை 2.1 விழுக்காடு வளர்ச்சியை சந்திக்கும் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்