ஸ்பெக்ட்ரம் கட்டணத்திற்கு எதிர்ப்பு!

வெள்ளி, 18 ஜூலை 2008 (17:39 IST)
6.2 மெகா ஹெர்ட்ஸ் அளவிற்கும் கூடுதலாக அலைவரிசையை (ஸ்பெக்ட்ரம்) பயன்படுத்தும் செல்பேசி நிறுவனங்கள் அதற்காக ஒரு முறை கட்டணம் செலுத்தும் திட்டத்தை தொலைத் தொடர்புத் துறை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஜி.எஸ்.எம். செல்பேசி நிறுவனங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சமாஜ்வாடி கடிசித் தலைவர் அமர்சிங், 6.2 மெகாஹெர்ட்ஸிற்கு மேலாக அலைவரிசையை பயன்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து அரசு ஒவ்வொரு கூடுதல் பயன்பாட்டு மெகாஹெர்ட்ஸிற்கும் ரூ.1,312 கோடி கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதனையொட்டி இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது.

உதாரணமாக பார்தி ஏர்டெல், வோடஃபோன் எஸ்ஸார், ஐடியா போன்ற ஜி.எஸ்.எம். செல்பேசி சேவை நிறுவனங்கள் 12 மெகாஹெர்ட்ஸ் வரையிலும் கூடுதல் அலைவரிசையை பயன்படுத்துகிறது. இதனால் ஒரு முறைக் கட்டணமாக ரூ.10,000 கோடி கட்டணம் வசூலிக்க தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டிருந்தது.

இ ந் நிலையில் செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு தொலைத் தொடர்புத் துறையின் இந்தத் தீட்டத்தை உடனடியாக கைவிடவேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்