புதிய கார்பன் ஸ்மார்ட் A111 ஸ்மார்ட்போன் அறிமுகம்

வெள்ளி, 8 பிப்ரவரி 2013 (15:42 IST)
FILE
கார்பன் மொபைல் நிறுவனம் தனது A111 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 இன்ச் தொடுதிரை மொபைலான கார்பன் A111 மொபைலுக்கு ஓராண்டு வாரண்டியும், மொபைலின் பகுதிப்பொருட்களுக்கு 6 மாத வாரண்டியும் உள்ளது. இந்த மொபைலின் ஆன்லைன் விற்பனை விலை ரூ.10290 ஆகும்.

புதிய கார்பன் ஸ்மார்ட் A111 டிவைஸ் 1.2GHz ஸ்கார்பியன் டியூவல் கோர் பிராசஸரைக் கொண்டுள்ளது. இதன் RAM கொள்ளளவு 512MB, மேலும் இந்த கைபேசி ஆண்ட்ராய்ட் V4 (ஐஸ்க்ரீம் சான்விட்ச்) ஓஎஸ்-இல் இயங்குகிறது. A111 டியூவல் சிம் மொபைல் 5 மெகாபிக்ஸல் ரியர் VGA கேமரா LED பிளாஸ் உடன் உள்ளது.

A111 ஸ்மார்ட்போனில் 3G, 2G, Wi-Fi, புளூடூத், GPS, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் 32GB வரை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ SD ஸ்லாட் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்