த.தொ.துறை வளர்ச்சி குறையும்: நாஸ்காம்

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (19:50 IST)
தகவல் தொழில் நுட்பத் துறையிலும், அதைச் சார்ந்த சேவைத் துறையிலும் இந்த நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி குறையும் என்று தேச மென்பொருள் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) தெரிவித்துள்ளது.

கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றுவரும் தொழில் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாஸ்காம் தலைவர் சோம் மிட்டல், இந்த நிதியாண்டின் முதல் அரையாணடில் (கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில்) 24 விழுக்காடு வளர்ச்சி இருந்தது என்றும், இரண்டாவது நிதியாண்டில் இந்த வளர்ச்சி மிகவும் குறையும் என்றும், அது எந்த அளவிற்கு இருக்கும் என்று நாஸ்காம் மதிப்பீடு செய்து வருவதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் அதனை நாஸ்காம் தெரிவிக்கும் என்றும் கூறினார்.

அடுத்த நிதியாண்டில் த.தொ.துறையிலும், அது சார்ந்த சேவைத் துறையிலும் ஊதியம் குறையும் என்றும் சோம் மிட்டல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்