சோனி ப்ளே ஸ்டேசன் 4 வீடியோ கேம்

வெள்ளி, 22 பிப்ரவரி 2013 (19:38 IST)
FILE
ஜப்பானின் மாபெரும் மின்னணுவியல் நிறுவனமான சோனி, அடுத்த தலைமுறை வீடியோ கேம் ப்ளே ஸ்டேசன் 4-ஐ வெளியிட்டுள்ளது.

பிஎஸ் 4 என்று பெயரிடப்பட்ட புதிய வீடியோ கேமில் 7 ஆண்டுகள் பழைய ப்ளே ஸ்டேசன் 3-ஐக் காட்டிலும் நவீனமான டச்பேட், மோசன் கண்ட்ரோல் மற்றும் பகிர்தல் (Share) ஆகிய வசதிகள் உள்ளன. இதன் கண்ட்ரோலர் டியூவல் ஷாக் 4 என்ற டச்பேட்-ஐச் சார்ந்தது.

சோனி நிறுவனம், யூஎஸ் நிறுவனமான கைகய் (Gaikai) என்ற க்ளவுடு கேமிங் நிறுவனத்தை 380 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கடந்த ஜூலையில் வாங்கியது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பிஎஸ் 4-இல் க்ளவுடு கேமிங் சேவையைப் பயன்படுத்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்