சாம்சங் கேலக்ஸி S4 அறிமுகமான ஒரு மாதத்தில் ஒரு கோடி விற்பனை

வெள்ளி, 24 மே 2013 (17:02 IST)
FILE
தென் கொரியாவின் மாபெரும் நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போன், அறிமுகமான ஒரு மாதத்திலேயே ஒரு கோடி விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போன், கடந்த மாதம் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலிருந்து ஒரு கோடி போன்கள் விற்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாம்சங் கேலக்ஸி எஸ்3 ரக போன்கள், ஒரு கோடி விற்பனையாக 50 நாட்களை எடுத்து கொண்டது. ஆனால், கேலக்ஸி எஸ்4 ஒரே மாதத்தில் இந்த சாதனையை எட்டியுள்ளது.

அமெரிக்காவில் இந்த போனுக்கு முன்பதிவு அதிகமாக உள்ளதால், எதிர்பாராதவிதமாக, அதை சப்ளை செய்வதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
FILE

வெப்துனியாவைப் படிக்கவும்