சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

செவ்வாய், 22 ஜனவரி 2013 (19:05 IST)
FILE
வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் தென் கொரிய மின்னணுவியல் நிறுவனமான சாம்சங், தனது புதிய வெளியீடாக சாம்சங் கேலக்ஸி கிராண்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வெளியிடப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அதனடிப்படையில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இந்த சாம்சங் கேலக்ஸி கிராண்ட் என்ற மொபைலை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,500 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனில் 5 இன்ச் WVGA TFT திரை, 8 மெகாபிக்ஸல் கேமரா உள்ளது. மேலும் இந்த போனில் ஆன்ட்ராய்டு 4.1 (Jelly Bean) இயங்குகிறது.

இந்த போனை ஒரு சிம் கார்டு (GT-I9082) வைத்தோ, இரு சிம் கார்டு (GT-I9080) வைத்தோ பயன்படுத்தத்தக்க ஒரு டியூவல் சிம் மொபைலாகும். 8GB உள்ள மெமரியை 64GB வரை விரிவுபடுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
FILE

சாம்சங் கேலக்ஸி கிராண்ட் ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்:

5 இன்ச் WVGA TFT LCD (800X480) திரை
ஆண்ட்ராய்டு 4.1.2 (Jelly Bean)
1.2 GHz டியூவல் கோர் பிராசஸர்
LED பிளாஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் பின்புறக்கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் ுன்புறக்கேமரா
8GB இன்டெர்னல் மெமரி மேலும் 64GB வரை விரிவுபடுத்தக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு
2100 mAh பேட்டரி
2G, 3G, Wi-Fi, புளுடூத் 4.0, எஸ் வாய்ஸ் ஆகியவற்றுக்குப் பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.