சாம்சங், ஆப்பிளுக்கு போட்டியாக பிளாக்பெர்ரி 10

திங்கள், 28 ஜனவரி 2013 (14:05 IST)
FILE
கனடாவின் செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஐ.எம், தனது பிளாக்பெர்ரி மொபைலை புதிய வடிவமைப்புகளுடன் வெளியிட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி S3 ஆகிய ஸ்மார்ட்போன்களின் பரபரப்பான கவர்ச்சியால் பிளாக்பெர்ரி மொபைலின் விற்பனை உலக அளவில் வெகுவாக சரிந்தது.

தகவல்தொழில்நுட்ப வல்லுநர்களின் கணிப்புப்படி, பிளாக்பெர்ரி 10 (பிபி 10) இந்த போட்டியை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று டெய்லி மெய்ல் ரிப்போர்ட் தெரிவிக்கின்றது.

தகவல்தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் டிவைஸ்-யைப் பயன்படுத்திவிட்டுத் தெரிவித்த கருத்துப்படி, வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் தேர்ந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்று டெய்லி மெய்ல் கருத்துத் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இன்பார்மா நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் மாலிக் கமால் சாதி, இந்த பிளாக்பெர்ரி 10 மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் (ஓ.எஸ்) தான் மக்கள் மனம்கவரும் துருப்புச்சீட்டு ஆகும். இந்த துருப்புச்சீட்டின் மூலம் பிளாக்பெர்ரி 7 மூலம் இழந்த பெயரை மீட்க முடியும் என்று மாலிக் கருத்துத் தெரிவித்தார்.

ஆனால் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் முதல் தலைமுறை ஐபோனில் உள்ளதைப்போல் உள்ளதால் மக்கள் இயல்பாக பயன்படுத்த சிறிதுகாலம் தேவைப்படும் என்று டெய்லி மெய்ல் கருத்துத் தெரிவித்துள்ளது.

பிபி 10 மக்களின் மனம் கவருமா? என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்