உலக கம்ப்யூட்டர் கல்வி தினம்

டிசம்பர் 2-ம் தேதி உலகம் முழுவதும் கம்ப்யூட்டர் கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற சிறப்பு தினங்களை போலவே இந்த தினத்துக்கும் தற்போது கூடுதலான சிறப்பு கிடைத்துள்ளது.

இந்த தினத்தை முன்னிட்டு என்ஐஐடி நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்விஃப்ட் ஜோதி என்னும் சிறப்பு கம்ப்யூட்டர் கல்வி இயக்கத்தைத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்தக் கல்வி இயக்கத்தை என்ஐஐடி நிறுவனம் நடத்துகிறது.

அண்மையில் இது தொடர்பான அறிவிப்பினை என்ஐஐடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேந்திர பவார் வெளியிட்டார். இந்த ஆண்டு மட்டும் இத் திட்டத்தின்கீழ் சுமார் 2 லட்சம் பேருக்கு கம்ப்யூட்டர் கல்வி அறிவூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நகரங்களில் மட்டுமில்லாமல் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறங்களிலும் இந்த இயக்கம் செயல்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்