உலகின் முதல் கிருமிநாசினி டச் ஸ்கிரீன் மொபைல் ஃபோன்

வியாழன், 23 ஜனவரி 2014 (16:30 IST)
நோய்களை பரப்பும் கிருமிகளை அழிக்கும் உலகின் முதல் கிருமிநாசினி மொபைல் ஃபோன் டச் ஸ்கிரீனை கார்னிங் நிறுவனம் தயாரித்துள்ளது.
FILE


நம்மை சுற்றி கண்ணுக்குப் புலனாகாத தொற்றை பரப்பக்கூடிய பல நுண்கிருமிகள் இருக்கின்றன. அவைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அது போலவே நாம் உபயோகப்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகளும் நோய் பரப்பும் கிருமிகளுக்கு புகலிடமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக நாம் அதிகமாக பயன்படுத்தும் கைபேசிகள் (Mobile phones) தான் நோய்க் கிருமிகளை அதிகம் கொண்ட கருவி. கைப்பேசிகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் நோக்கில் கார்னிங் எனப்படும் கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனம் கைபேசியின் ஸ்கிரீனில் தஞ்சம் புகும் கிருமிகளை அழிக்கும் அதிநவீன ஸ்கிரீன் ஒன்றை உருவாக்கியுள்ளது.

ஆன்டிமைக்ரொபயல் கொரில்லா கிளாஸ் (Antimicrobial Gorilla Glass) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்கிரீன் கைபேசிகளை பாதிக்கும் பாக்டீரியாக்களை அழித்து அவற்றை பிற அழிவிலிருந்து பாதுகாக்கும். இனி நீங்கள் உங்கள் கைபேசியை துணி கொண்டு துடைக்கவோ, கைச்சட்டையைக் கொண்டு துடைக்கவோ தேவையில்லை எல்லவற்றையும் கொரில்லா கிலாஸ் பார்த்துக் கொள்ளும்.
FILE


இது 99.9 சதவிகிதக் கிருமிகளைக் கொல்லும் என உறுதியாக நம்பப்படுகிறது.

கைபேசியின் கிருமிநாசினியாக செயல்படும் இந்தக் கண்ணாடி சில்வர் மற்றும் இரும்புத் தாதுக்களின் கலவையால் உருவாக்கப்பட்டு, பாசி, பூஞ்சைக்காளான், பூஞ்சை, பாக்டீரியா போன்றவைகளின் வளர்ச்சியை தன்னகத்தேக் கொண்டுள்ளது. அதனால் இது நோய் தொற்றுக் கிருமிகளை அழிப்பதோடு கருவியின் ஆயுளையும் நீட்டிக்கும். இந்தக்கண்ணாடி தற்போது சாம்சங் தயாரிப்பு ஸ்மார்ட் கைபேசிகளில் வெளிவருகிறது.